புத்தாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் எவ்வளவு தெரியுமா ?
2026 ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆண்டுதோறும் குழந்தைகள் பிறந்து வந்தாலும், சில நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்றுமே சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் தனிசிறப்பை பெற்றுள்ளன.
அந்த வகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய அரசு மருத்துவமனையில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண் 5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண்-6, பெண்-14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண்-24, பெண்-23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண்-12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும், சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் என தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
What's Your Reaction?

