எங்க தொகுதி MP-ஐ காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க! போஸ்டரால் பரபரப்பு....

Feb 27, 2024 - 17:58
Feb 27, 2024 - 18:01
எங்க தொகுதி MP-ஐ காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க! போஸ்டரால் பரபரப்பு....

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் எம்.பி.யை காணவில்லை என்ற சுவரொட்டி ஒட்டபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தொகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டு பல்வேறு மாவட்டங்களில் ‘கண்டா வரச் சொல்லுங்க.. எங்க தொகுதி MP-ஐ எங்கேயும் காணவில்லை..’ என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி எம்.பி ஆக உள்ளார். அவர் கடந்த 5 ஆண்டுகளில் சில முறை மட்டுமே தொகுதி பக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் கண்டா வரச் சொல்லுங்கள் என்ற தலைப்பில் கணேசமூர்த்தியை காணவில்லை என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அச்சகம், அமைப்பு என்ற எதன் பெயரும் குறிப்பிடப்படாமல் உள்ள நிலையில் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow