விஜய் குறித்து கேள்வி...ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 

எங்கள்  தமிழக முதல்வர் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது

Oct 28, 2024 - 10:56
விஜய் குறித்து கேள்வி...ஆவேசமான அமைச்சர் சேகர் பாபு 

தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு என்ன சொல்ல வேண்டும் நினைக்கிறீர்கள் என அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாக பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொளத்தூர் அகரம் ஜெகநாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் அடிப்படை வசதிகளை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் செய்து வருகிறார். பெண்களுக்கு அனிதா பெயரில் கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார்.ஆண்களுக்கும் கட்டணம் இல்லாமால் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார். தொடர்ந்து இலவச தையல் பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார். இதன் மூலம் பயிற்சி முடித்தவர்களுக்கு  இலவச சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் படைப்பகம் என்ற பெயரிலே சென்னை மாநகராட்சியும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியைக் கொண்டு புதிதாக குறைந்த கட்டணத்தில்   சென்னையில் முதல் கோ ஒர்கிங் பிளேஸ்  முதல்வர் படைப்பகம் என்ற பெயரில் திறக்கப்பட உள்ளது. ஒரே முறை 50-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படிக்கலாம், அதற்கென நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கூறிய சேகர்பாபு, கூடிக் கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை திமுக. கொள்கை சார்ந்த கூட்டம். எப்படிப்பட்ட புயல் மழை வெள்ளம் வந்தாலும், அனைத்தையும் மேற்கொண்டு கடல் அலை முரணாக இருக்கின்றபோது கூட அதை நேர்த்தியாக கரைத்து செலுத்துகின்ற மாலுமி எங்கள் முதல்வர். எனவே எங்கள்  தமிழக முதல்வர் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்றார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow