தவெகவை நல்லபடியாக நடத்துங்க...விஜய்க்கு பிரபு சொன்ன வாழ்த்து
விஜய் கட்சி தொடங்கி நல்லபடியாக நடத்தட்டும் என நடிகர் பிரபு வாழ்த்து
தவெக என்ற கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம், கட்சி கொடி பாடல் என அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் தவெக சார்பில் மாநாடு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. மாநாட்டு பணிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டார். இந்த நிலையில் போலீசாரின் அனுமதி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் நேற்று விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் மிக பிரமாண்ட முறையில் தவெக மாநாடு நடைபெற்றது. இதில் தவெகவின் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் வாசிக்கப்பட்டது. குறிப்பாக தவெக கொள்கை முடிவுகள் என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் தவெகவின் கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
மேலும் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் தவெக ஏற்கவில்லை என தெரிவித்தார். மேலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு என கூறினார்.
மேலும் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்ற பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று கத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தவெகதான் என்று பேசி இருந்தார்.இந்த நிலையில், தவெக மாநாடு மற்றும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் தனியார் நகைக்கடை புதிய விற்பனையகத்தை நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த நடிகர் பிரபு, விஜய் கட்சி தொடங்கி நல்லபடியாக நடத்தட்டும். இதற்கு தனது வாழ்த்துக்களையும், சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த நகைக்கடை தன்னுடைய கடை இல்லை. தான் ஒரு பிரதிநிதியாக பங்கேற்க வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், நான் திருப்பதி செல்லும் போது திருவள்ளூர் வழியாக செல்வது வழக்கம் தற்போது இதே இடத்தில் இந்த நகைக்கடையை திறந்த வைத்தது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து ரசிகர்களுடன் நடிகர் பிரபு மற்றும் ரெஜினா கசாண்ட்ரா செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
What's Your Reaction?