மீண்டும் இணைந்த ரவிமோகன் - கெனிஷா? இம்முறை வித்தியாசமாக...

ரவி மோகன் இயக்கி தயாரிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் கெனிஷா திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 5, 2026 - 18:30
மீண்டும் இணைந்த ரவிமோகன் - கெனிஷா? இம்முறை வித்தியாசமாக...

நடிகர் ரவி மோகன் தற்போது தனது அடுத்த கட்ட சினிமா பயணத்தில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல் கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கெனிஷா ஏற்கனவே தனிப்பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்கள் மூலம் இசைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அனுபவத்தைத் தொடர்ந்து தற்போது திரைப்பட இசையமைப்பிலும் தனது பயணத்தை தொடங்குகிறார். இதன் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக கெனிஷாவின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையும் கடந்த சில காலமாக செய்திகளில் இடம்பெற்று வருகிறது. மனைவி ஆர்த்தியுடனான பிரிவு மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில் கெனிஷாவுடனான அவரது நெருக்கம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து அவரிடம் விவாகரத்து கேட்ட நிலையில், இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு இடையே பாடகி கெனிஷா உடன் ரவிமோகன் நெருக்கம் காட்டிய நிலையில், இருவரும் கோவில், விழாக்கள் என ஒன்றாக சுற்றி வந்தனர். 

ஒருக்கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் எப்படி ரவிமோகன் சுற்றலாம் என்று அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாக, ரவியை விட்டு தான் பிரிவதாக கெனிஷா அறிவித்தார். அதோடு, சென்னையையும் காலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமான ரவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னுடைய அனைத்து கஷ்டங்களையும், ஆதங்கத்தையும் பொதுவெளியில் கொட்டி தீர்த்தார்.

இந்நிலையில், தற்போது இருவரும் சினிமா பணிக்காக மீண்டும் இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், மறுபுறம் கெனிஷாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். யோகிபாபு நடிக்கும் இப்படத்தின் இசை எப்படி அமையப்போகிறது என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow