ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டேன்…அரசியலுக்கு வருகிறாரா ரவிமோகன்?
சென்னையில் இன்று(செப்.,05) நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில், நடிகர் ரவிமோகனிடம் ரசிகர் ஒருவர் அரசியல் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பேசிய நிர்வாகி ஒருவர், “அண்ணா, குரல் கொடுங்கள்... கொடியை கொடுங்கள், கோட்டையைப் பிடிக்கலாம். நாங்கள் அலை அலையாக வருகிறோம்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ரவிமோகன், “ரசிகர்களை நடிகர்கள் சந்தித்தால் அதை அரசியலாக பார்க்கிறார்கள். நான் இப்போது சினிமாவில் மட்டுமே இருக்கிறேன்” என்று கூறினார்.
மேலும், “நல்லது செய்ய பதவி தேவையில்லை. தேவைப்பட்டால் அதை எடுத்துச் செய்யலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் குறித்துப் பேசிய ரவிமோகன், “தோல்விகள்தான் என் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொடுத்தது. நான் எப்போதும் ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டேன்” என கூறினார்.
ரசிகர் ஒருவர் வெளிப்படையாக அரசியல் களத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ரவிமோகன் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
What's Your Reaction?