அரியானாவில் காங்கிரசின் பிரிவினைவாத அரசியல் நிராகரிப்பு- அமித்ஷா பெருமிதம்

வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை அவமதித்தவர்களுக்கு வீர பூமியான அரியானா மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

Oct 8, 2024 - 19:58
அரியானாவில் காங்கிரசின் பிரிவினைவாத அரசியல் நிராகரிப்பு- அமித்ஷா பெருமிதம்
அரியானாவில் காங்கிரசின் பிரிவினைவாத அரசியல் நிராகரிப்பு- அமித்ஷா பெருமிதம்

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் நிராகரித்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அரியானாவில் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்.5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. காலையில் தொடர்ந்து முன்னிலை வகித்த காங்கிரஸ் 10 மணிக்கு பிறகு பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மேலும் ஆளும் பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அங்கு காட்சிகள் அனைத்தும் மாறியுள்ளது. மீண்டும் அரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “அரியானாவில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாக உள்ளது. சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரசின் எதிர்மறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை அரியானா மக்கள் முற்றுலுமாக நிராகரித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை அவமதித்தவர்களுக்கு வீர பூமியான அரியானா மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்த அரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow