"ஒரு சிலையும் இருக்கக்கூடாது" - தலைவர்கள் சிலையை அகற்ற ஐகோர்ட் ஆர்டர்

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 13, 2024 - 20:27
Mar 14, 2024 - 17:01
"ஒரு சிலையும் இருக்கக்கூடாது" - தலைவர்கள் சிலையை அகற்ற ஐகோர்ட் ஆர்டர்

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக் கோரி திமுக-வை சேர்ந்த வி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் வகையில் அதிமுக-வைச் சேர்ந்த வி.யு.மருதாச்சலம்  என்பவர் சிலையை அமைத்து இருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருதாசலம் தரப்பில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் பேருந்து நிலையத்தின் இடத்தில் சிலை அமைக்கப்படவில்லை என்றும், புறம்போக்கு இடத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஜெயலலிதா மட்டுமல்லாமல், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளும் இருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலைகளை அகற்றும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே புறம்போக்கு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்றவேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow