சராசரி ஆயுளைக் குறைத்த கொரோனா தொற்று... எவ்வளவு தெரியுமா?
கொரோனா தொற்று பாதிப்பால் மனிதர்களின் சாரசரி ஆயுள் குறைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் மனிதர்களின் சாரசரி ஆயுள் குறைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
உலகம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மிகப்பெரிய பேரிடர் என்றால் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எனப் பட்டெனச் சொல்லிவிடலாம். அதனால், ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகள் ஏராளம். இந்நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில் அதிர்ச்சிகரமான, தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கொரோனா தொற்று உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுளில் 18 மாதங்களைக் குறைத்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதில் ஆறுதல் அளிக்கும் ஒரே தகவல் பெரும் நோய் தொற்று காலங்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த காலங்களை விடக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றம் மற்றும் அரசியலில் ஏற்பட்டுள்ள சவால்கள், குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடரை சமாளிக்க தேவையான திட்டங்களை வகுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?