கிண்டி ரேஸ் கிளப் வழக்கு.. பட்டென பறந்த உத்தரவு

குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Sep 26, 2024 - 21:46
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு.. பட்டென பறந்த உத்தரவு

குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு  உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்–புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்தரன் ஆஜராகி, நிலம் குத்தகை ரத்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், இந்த அவமதிப்பு வழக்கின் விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ரேஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஆர்.எம்.டீ.டீக்கராமன், ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல்  வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கூடிய வழக்கு எனக் கூறி,  மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow