தென் மாநில கவுன்சில் கூட்டம்... ஆஜரான விஜய்... ஆப்சென்ட்டான 2 முதல்வர்கள்..!

சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மாநிலங்களின் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 20) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது. 

Aug 20, 2026 - 11:58
Aug 20, 2026 - 12:32
தென் மாநில கவுன்சில் கூட்டம்... ஆஜரான விஜய்... ஆப்சென்ட்டான 2 முதல்வர்கள்..!

இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீஷன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு விக்ரமார்கா கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தென் மாநிலங்களின் வளர்ச்சி, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினை, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநிலங்களின் கோரிக்கைகள் மற்றும் பொதுவான பிரச்சினைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow