ப்ரஷ் காம்போவில் வெளியானது சூர்யாவின் ’கருப்பு’ திரைப்படத்தின் டீசர்!

நடிகர் சூர்யா- ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

ப்ரஷ் காம்போவில் வெளியானது சூர்யாவின் ’கருப்பு’ திரைப்படத்தின் டீசர்!
Karuppu Teaser reponse from fans

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் "கருப்பு" திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, சாய் அபயங்கர் என ப்ரஷ் காம்போவில் களமிறங்கி இருக்கும் சூர்யாவிற்கு இந்த படமாவது கைக்கொடுக்குமா?

சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையில் வெளியாகிய, ரெட்ரோ திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதற்கு முன் திரையில் வெளியாகிய கங்குவா திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் படுத்தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தனது 45-வது திரைப்படத்தில் யாரும் எதிர்ப்பாராத வகையில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கியிருந்த ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையப் போவதாக சூர்யா அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக் தான் கொடுத்தது. இப்படத்திற்கு கருப்பு என பெயர் சூட்டப்பட்டது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோர், கருப்பு திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்கள். சூர்யாவுடன், நீண்ட வருடங்களுக்கு பிறகு த்ரிஷா இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. இவர்களுடன் இந்திரன்ஸ், நட்டி (நட்ராஜ்), ஸ்வாசிகா, சிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி போன்றவர்களும் கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் சென்சேஷ்னல் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கருப்பு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் வெளியான 1 மணி நேரத்திலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள நிலையில் டீசர் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் சிலர் தெரிவித்த கமெண்ட்ஸ் பின்வருமாறு-

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow