தீபாவளி போனஸ் அறிவிச்சாச்சு... அரசு ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை கிடைக்கப் போகிறதா?

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 

Oct 27, 2026 - 17:01
தீபாவளி போனஸ் அறிவிச்சாச்சு... அரசு ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை கிடைக்கப் போகிறதா?

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்தச் செலவுகளுக்கு நடுவே அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைத்தால் சொல்லவா வேண்டும்? அந்த வகையில், தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மின் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

யாருக்கெல்லாம் 20% போனஸ்?

இந்நிலையில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமான 8.33 சதவீதம் மிகை ஊதியமும், 11.67 சதவீதம் கருணைத்தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. இதன்படி, தகுதியுள்ள ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை தொடர்பான விதிமுறைகளும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. அதாவது, உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow