கவரைப்பேட்டை ரயில் விபத்து: வெளியானது முதல் தகவல் அறிக்கை.. விவரங்கள் இதோ!
கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதிக்கொண்ட விபத்து சம்பவத்தை அடுத்து, விரைவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 36 மணி நேரத்திற்கு பிறகு இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதில், பலத்த சட்டத்துடன் விபத்து நேர்ந்ததாகவும், கிரண் குமார் என்ற ரயில்வே ஊழியர் முதலில் சென்று விபத்து பகுதியை பார்த்து தகவல் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும், காயம் ஏற்படும் வகையிலும் செயல்படுதல், வேகமாகவும், கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
இதனிடையே, ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி வரும் 16, 17 ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது, பாக்மதி ரயில் லோகோ பைலட், கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?