விடுமுறைக் கொடுக்காத கலெக்டர்… அவதிக்குள்ளான மாணவர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
கனமழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுமுறை அளிக்காததால் பெற்றோர்களின் கோபத்திற்கு உள்ளான கிருஷ்ணகிரி கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட கலெக்டர் மாவட்ட கல்வித்துறையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை . இதனால் பள்ளி மாணவ மாணவிகள் நனைந்தபடி இன்று பள்ளிகளுக்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி 7 நிமிட அளவில் மாவட்ட கலெக்டர் கூறியதாக மக்கள் தொடர் அலுவலர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கனமழை பெய்து வருவதால் அரை நாள் மட்டும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
3.30 மணியளவில் அனைத்து பள்ளிகளும் முடிவடையும் நேரத்தில் மதியம் 2 மணி 7 நிமிடங்களில் கலெக்டர் விடுமுறை அறிவித்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாணவ, மாணவிகள் பலரும் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர் .
நேற்று பெய்த மழையில் பல மாணவ மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாவட்ட கலெக்டரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
What's Your Reaction?