Thirunelveli : இன்னைக்கு Exam கிடையாது கிளம்புங்க... தேர்வை ரத்து செய்த கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்! ஏமாந்த தேர்வர்கள்...

கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், இதனை அறியாமல் தேர்வு எழுத வந்தவர்கள் பேருந்து மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்

Mar 3, 2024 - 13:57
Thirunelveli : இன்னைக்கு Exam கிடையாது கிளம்புங்க... தேர்வை ரத்து செய்த கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்! ஏமாந்த தேர்வர்கள்...

கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், இதனை அறியாமல் தேர்வு எழுத வந்தவர்கள் பேருந்து மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்தத் தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் அனுப்பினர். மேலும் 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இந்த எழுத்துத் தேர்வு திட்டமிட்டப்படி இன்று (மார்ச் 3) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் உள்ளூர் மக்கள் அறிவித்தனர். இதையடுத்து, தேர்வை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக அணுமின் நிலைய நுழைவுவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால், தேர்வெழுத வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களை, அனுமின் நிலைய நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow