திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரின் மைத்துனர் அடித்து கொலை... தஞ்சையில் பரபரப்பு...

vice-chairman Brother-in-law death.

Apr 2, 2024 - 07:53
திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரின் மைத்துனர் அடித்து கொலை... தஞ்சையில் பரபரப்பு...

தஞ்சையை அடுத்த பசுபதி கோவில் பகுதியில், திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மைத்துனர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசுபதி கோவில் மணல் மேட்டுத் தெருவில் வசிப்பவர்கள் செந்தில்குமார் மற்றும் அழகேசன். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவராக செந்தில்குமார் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தஞ்சையில் தங்கி இருந்த செந்தில்குமார், தனது மைத்துனர் ஜெயக்குமார் மற்றும் அவரின் நண்பர் பிரவீனுடன் அங்குள்ள பசுபதி கோவில் சென்றுவிட்டு மீண்டும் தஞ்சைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

செந்தில்குமார் ஊருக்குள் வந்து விட்டு செல்வதை அறிந்த அழகேசன், தனது ஆதரவாளர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். செந்தில்குமாரின் கார் கண்ணாடிகளை உடைத்து, காருக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்த அழகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில், ஜெயக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். மேலும், படுகாயம் அடைந்த செந்தில்குமார், பிரவீன் இருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow