மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

கடந்த வாரத்தில் 3 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று திடீரென பவுனுக்கு 480 ரூபாய் அதிகரித்திருப்பது தங்கம் வாங்கும் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

Sep 20, 2024 - 12:05
மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை
gold

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திடீரென பவுனுக்கு 480 ரூபாய் அதிகரித்து தற்போது ஒரு பவுன் 55,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வியாழக்கிழமையன்று பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து 54,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,825 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயா்ந்து 6,885 ரூபாய்க்கும், பவுனுக்கு 480 ரூபாய் உயா்ந்து 55,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி கிராமுக்கு 1.50 ரூபாய் உயா்ந்து 97.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,500 ரூபாய் உயா்ந்து 97,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுவரை இல்லாத அளவு கடந்த ஜூலை மாதத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 55,000 ரூபாயைக் கடந்தது. மத்திய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரியைக் குறைத்ததை அடுத்து, தங்கத்தின் விலை 3,000 ரூபாய் வரை குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படியிருக்க இந்த திடீர் விலையேற்றம் தங்கம் வாங்குபவர்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. சா்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதன் விளைவாகவே அதன் விலை ஏறியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow