ஓவர் CONFIDENCE...ஓட்டுக்கு காசில்லை... மிரட்டும் விஜய்!

வருகிற அக்-6 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எப்படியாவது எதிர் அணியினர் தோற்கடித்து,வெற்றி பெற வேண்டும் என்பதில் தவெக முனைப்பு காட்டி வரும் நிலையில், இதற்காக விசில் கட்சியினர் மாஸ்டர் பிளான் போட்டு கொண்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Sep 16, 2026 - 13:00
ஓவர் CONFIDENCE...ஓட்டுக்கு காசில்லை... மிரட்டும் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு துவண்டு போய் இருந்த திமுக தலைமை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் இதற்கான வேலைப்பாடுகளில் திமுக தலைமை தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக இந்த இடைத் தேர்தலை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில்  திமுக குடும்பத்தினர் இதில் தீவிரமாக உள்ளனர். திமுகவை பல வழிகளிலும் முதல்வர் விஜய் டார்கெட் செய்துவருவதால், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்டாலின். இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து 30 மாஜி அமைச்சர்கள், 50 திமுக எம்எல்ஏக்களை களம் இறக்கியிருக்கிறது திமுக தலைமை.

இதில் 12 முதல் 15 மாஜி அமைச்சர்கள் மற்றும் 20 திமுக எம்.எல்.ஏக்களை ஒரு தனி குழுவாகப் பிரித்து தாராபுரத்துக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி இடைத்தேர்தலுக்காக பணிகளில் திமுக முழுவீச்சில் இறங்கியுள்ளதாக அறிவாலயத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம்  தி.மு.க. தரப்பு இப்படியாக வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்க.

சட்டமன்றத்தில் தங்களது பலத்தை அதிகரிக்க இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தவெக தலைவர் விஜய். இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையே த.வெ.க. வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது அக்கட்சியின் தலைமை.  இதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன.

2026 பொதுத் தேர்தலில் த.வெ.க.வுக்கு வாக்களித்தவர்கள் யாரும் வேட்பாளர்களைப் பார்க்கவில்லை. விசில் விஜய் முகத்தையும் சின்னத்தையும் மட்டுமே பார்த்து வாக்குகளை செலுத்தினர். ஆனால், இப்போது அப்படி அல்ல. இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எடைபோட்டு பார்க்கும் தேர்தல். இதனால் யார் வேட்பாளர் என்பதை பார்த்துதான் வாக்களிப்பார்கள்.

அவ்வகையில், தற்போது களம் இறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் மரகதம், சத்தியபாமா ஆகிய இருவருக்குமே சொந்த செல்வாக்கு இருப்பதால், அவர்கள் போட்டியிட த.வெ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, திமுக மற்றும் அதிமுகவினர் எப்படி ரூட்டை போட்டு தேர்தலை அணுகுவார்கள் என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இரண்டு திராவிடக் கட்சிகளையும் சமாளிக்கும் ஆற்றல் இவர்கள் டீமுக்கு கைவந்த கலை என்பதால் வெற்றி எளிது என நினைக்கிறது. தவெக தலைமை மதுராந்தகம் தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோரும். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் துணைப் பொறுப்பாளர்களாக சரவணமூர்த்தி உட்பட நான்கு எம்.எல்.ஏக்களை நியமித்திருக்கிறது அக்கட்சித் தலைமை.

அதேபோல் தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ், இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், துணைப் பொறுப்பாளர்களாக பாலமுருகன் உட்பட ஐந்து எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தேர்தல் பணியை துவங்கிவிட்டனர்.

விஜய் பிரசாரம் எப்போது?

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார் விஜய். பொதுதேர்தலில் எப்படி தவெ.க தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையோ அதே அணுகுமுறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம். விஜய் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும், தேவையிருந்தால் இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான வியூகங்களை அமைக்கும் பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தவெக தரப்பில் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சமீபத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஒன்றாக இணைந்து முதல்வர் விஜய் மேடை பிரசாரம் செய்வது குறித்தும் பரிசீலனையில் இருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களில் த.வெ.க அரசு அறிவித்திருக்கும் நலத்திட்டங்கள், கூட்டணி பலம், திராவிடக் கட்சிகள் மீதான அதிருப்தி, இரண்டு வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு, விசில் சின்னம் ஆகியவை தங்களுக்கு சாதகமான அம்சங்கள் என நம்புகிறார் முதல்வர் விஜய். இதுதவிர இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் தனி வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து, தங்களுடைய பலம் நிறைந்த சோஷியல் மீடியாக்கள் வாயிலான பிரசாரத்தை, ஜென்-ஸீ வாக்காளர்களைக் குறிவைத்து, த.வெ.க.வினர் படு ஸ்பீடில் துவங்கியிருக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

(தாரை இளமதி, கு.கணேஷ்குமார், அ.கண்ணதாசன்)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow