சட்டபேரவை கூட்டம்... தந்தை உரையை கேட்க ஆவலோடு வந்த இன்பநிதி!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திற்கு தந்தையின் உரையைக் காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Sep 3, 2026 - 15:02
சட்டபேரவை கூட்டம்... தந்தை உரையை கேட்க ஆவலோடு வந்த இன்பநிதி!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் விஜயின் உரை என்பதால், இன்று சட்டப்பேரவையில் காரசாரமாக வாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயின் ஆட்சி அமைந்து 116 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆதாரப்பூர்வமாக பல்வேறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். மேலும், பல்வேறான கேள்விகளையும் முன்வைத்தார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் உதயநிதி ஸ்டாலின் இன்றைய விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாடு சட்டசபையின் அவை நடவடிக்கைகளை இன்று பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி வருகை தந்துள்ளார்.

பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் அவை நடவடிக்கைகளை இன்பன் உதயநிதி உற்று கவனித்தார். தனது தந்தையும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மிக முக்கியமாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசுவதால், அவரது உரையைக் கேட்க சட்டசபைக்கு வருகை தந்ததாகத் தெரிகிறது.

இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் மாதம் சட்டமன்றம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது உதயநிதி ஸ்டாலின் பேச்சைப் பார்க்க, திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனும், உதயநிதியின் தங்கை கணவருமான சபரீசனும் வந்திருந்தார்.

இதனிடையே, சபரீசனுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்க சபரீசன் வந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

குறைந்தபட்சம் அரை மணி நேரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு ஆளுங்கட்சியினர் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே, உதயநிதி பேசும்போது பார்வையாளர் மாடத்திற்குச் சென்று அங்கிருந்து அவை நிகழ்வுகளைப் பார்வையிட்டார். பின்னர், உதயநிதி பேசி முடித்ததும் இன்பநிதி புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, இன்பநிதி சட்டப்பேரவைக்கு வந்து தனது தந்தையின் உரையைக் கேட்க சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு வருகின்ற திங்கள் கிழமை அன்று முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow