செல்லாது செல்லாது வேலைவாய்ப்பு செல்லாது....விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

Jul 27, 2026 - 18:00
செல்லாது செல்லாது வேலைவாய்ப்பு செல்லாது....விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பின்னர் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்த அரசு வேலை நியமனத்தை எதிர்த்து சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஏற்கனவே தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், தமிழக வெற்றி கழகம் சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் அரசு வேலை வழங்கியது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த
விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை தொடர்பான விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow