நீர்த்தேக்க தொட்டி விவகாரம்..எம்.எல்.ஏவை சூழ்ந்த மக்கள்.. வேலூரில் பரபர
வேலூர் சின்ன அல்லாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அசுத்தமாக இருப்பது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியான நிலையில், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையர் ஜானகி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அவர்களை அங்குள்ள பொதுமக்கள் சுற்றி வளைத்து அடுக்கடுக்கன புகார்களை முன்வைத்தனர்.

வேலூர் மாநகராட்சி நான்காவது மண்டலம் 48வது வார்டு சின்ன அல்லாபுர பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டி அருகிலும் குப்பைகள் கொட்டிய நிலையில் உள்ளது.
மேலும் குடிநீர் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு முதல் தொட்டியில் மேல் பகுதி வரை மது பாட்டில், பீடி, சிகரெட், பிளாஸ்டிக் இந்த குடிநீர் தொட்டியில் பரவலாக காணப்படுகிறது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள், தினமும் குடிநீர் தொட்டியின் மீது ஏறி போதை ஆசாமிகள் மது அறுந்திவிட்டு பாட்டிலை தொட்டிக்குள்ளே போட்டுவிடுவதாகவும், இரவு நேரங்களில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி பர்த்டே பார்ட்டி வைத்து ரகளை செய்வதகவும் அடுக்கடுகான புகார்களை கூறினர்.