”கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்?”.. மழை வேண்டி கிராம மக்கள் செய்த நூதன வழிபாடு

மழை வேண்டி கிராம மக்கள் சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர்.

Sep 22, 2024 - 10:44
Sep 22, 2024 - 10:45
”கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்?”.. மழை வேண்டி கிராம மக்கள் செய்த நூதன வழிபாடு

மழை வேண்டி கிராம மக்கள் சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர்.

 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது மேல்புரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் அதிகப்படியாக விவசாயம் சார்ந்த தொழில்களையே நம்பி விவசாயம் செய்து வருகின்றன. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பருவமழை போதிய அளவு வராத காரணத்தினால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நிலக்கடலை சாகுபடி செய்துள்ள நிலையில் தற்பொழுது அறுவடைக்கு தயாராகி பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்து வருகின்றன. ஆனால் விவசாய நிலம் வறண்டு கிடப்பதினால் நிலக்கடலை செடிகளை பிடுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாயிகள் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி இரவு முழுவதும் செடிகளுக்கு பாய்ச்சி அதன் பிறகு காலை இலகுவாக இருக்கும் பொழுது நிலக்கடலை செடிகளை பிடுங்கி வருகின்றனர். மேலும் அடுத்த கட்டமாக விவசாயம் செய்ய மழை வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக மேல்பூரிகள் கிராம பகுதியில் உள்ள பெண்கள் அருகிலுள்ள சுடுகாட்டில் இரவு நேரத்தில் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து மழை வேண்டி நூதன முறையில் வழிபாடு செய்தனர். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் கிராமத்திற்கு மழை வரும் என கிராம மக்கள் எதிர்பார்த்து செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow