அகர்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. தீக்கிரையான இயந்திரங்கள்! 

நாட்றம்பள்ளி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில்  மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 

Apr 2, 2024 - 02:11
அகர்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. தீக்கிரையான இயந்திரங்கள்! 

திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குட்டிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அதே பகுதியில் அகர்பத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தொழிற்சாலையில்  நேற்று மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். 

ஆனால் அதற்குள்ளாக அகர்பத்தி தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அகர்பத்தி  தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. தீவிபத்து குறித்து வழக்குபதிவு செய்த நாட்றம்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது தெரிய வந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow