ரீல்ஸ் எடுப்பதில் தான் ரயில்வே அமைச்சரின் கவனம் இருக்கு.. மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி
ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்தும் ரயில்வே துறை அமைச்சர், தென் மண்டல ரயில் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என விருதுநகர் மக்களவை எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திருநகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருதநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறியதாவது, “சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதில் ”நியாயப்பாதை” என்ற தலைப்பில் பல்வெறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தனியார் கல்வி நிலையங்களில் அரசியல் சாசனம் 15 (5) வது பிரிவுகளின் கீழ் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மாணவர்களுக்கு உரிய இடம் கொடுக்க மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 27 சதவீதம் இருந்த இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பழங்குடி மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான இட ஒதுக்கீடு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாதி வாரிய கணக்கீடு மிக முக்கியமானதாக உள்ளதால் மோடி அரசும், ஆர்எஸ்எஸ்-ம் அதை எடுக்க மாட்டார்கள். அவ்வாறு எடுத்தால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்த மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கும் என்பதால் மோடி அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.”
ஜாதி வாரி கணக்கெடுப்பு: தமிழக அரசுக்கும் கோரிக்கை
”தெலுங்கானாவில் நடத்தியது போல தமிழக அரசும் ஜாதி வரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த எம்.பி மாணிக் தாகூர், தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் பெண்கள் குறித்தும் பேசியது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு, “முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர்களின் பேச்சு கண்டிக்கத்தக்கது,அருவருக்கத்தக்கது. அதிகாரத்தின் மமதையால் பேசியுள்ளார்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.
தென் மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள்நிறைவேற்றப்படாதது குறித்த கேள்விக்கு, ரயில்வே துறை அமைச்சர் ரீல்ஸ் எடுப்பதில் தான் கவனம் செலுத்துகிறார். ரயில்வே திட்டங்களை பொருத்தமட்டில் ரயில் விடுவதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ரயில்கள் வருவதற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பாராளுமன்றத்திலும் நேரிலும் இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம்.வரும் 24-ஆம் தேதி தென் மண்டல ரயில்வே திட்டங்கள் தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தென் மாவட்டங்களான விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளின் ரயில்வே திட்டங்களை தென் மாவட்ட எம்பிக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.
Read more: என்னங்க பண்றீங்க? மாட்டுச் சாணத்தை வகுப்பறையின் சுவரில் பூசிய கல்லூரி முதல்வரால் பரபரப்பு
What's Your Reaction?






