கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்றத் தலைவி கைது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Nov 22, 2023 - 11:02
Nov 22, 2023 - 13:55
கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்றத் தலைவி கைது

வேப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்ற தலைவி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம்.இவர் வடபாதி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.இவரது வீட்டில் கள்ளச்சாராயம் வைத்து விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் கற்பகம் வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது சாக்கில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் கற்பகத்தை கைது செய்தனர்.

ஏற்கனவே இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்ததற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்படு பிணையில் வெளியில் வந்து மீண்டும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow