வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி-அதிகாரிகளின் அலட்சியம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nov 29, 2023 - 12:13
வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி-அதிகாரிகளின் அலட்சியம்

வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி-அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்லக்கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்துவிட்டு புதிதாக பயணிகள் நிழற்குடையை கட்டி வருகிறார்கள்.

இந்த பயணிகள் நிழற்குடை பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து சுவர் பூச்சுவேலைகள் இருந்துள்ளது.இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேலே மிகவும் தாழ்வாக கைகளை நீட்டினால் தொடும் அளவிற்கு மின்சார கம்பி சென்று கொண்டிருக்கிறது.

இன்று மதிய நேரத்தில் பயணிகள் நிழல் குடை கட்டிடத்தின் மீது கட்டிட பணியில் 18 வயதுடைய வினோத்குமார் என்ற பெருங்குடி பகுதியை சேர்ந்த தந்தை இல்லாத இந்த இளைஞர் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் மிகவும் தாழ்வாக சென்ற மின் கம்பியில் கைகள் பட்டு உரசி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

வலங்கைமான் ஒன்றிய அலுவலர்களின் அலட்சிய போக்கினால் தந்தையை இழந்த ஒரு மகன் தற்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.இவருடைய உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

அரித்துவார் மங்கலம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.இது குறித்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, நாங்கள் ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டோம் என கூறினார்கள்.

இதுகுறித்து ஆலங்குடி உதவி மின் நிலைய உதவி பொறியாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நாங்கள் மின் இணைப்பைத் துண்டித்திருப்போம் என தெரிவித்தார்.

வலங்கைமான் ஒன்றிய அலுவலக அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் மின்சாரம் தாக்கி பரிபோய் உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow