தவெக கூட்டத்தில் சலசலப்பு.. விஜய் ரசிகை கேட்ட நருக் கேள்வி..விறு விறுவென இடத்தை விட்டு காலியான புஸ்ஸி ஆனந்த்
தஞ்சையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனட்ந்திடம் விஜய் ரசிகை கேட்ட கேள்வியால் சலசலப்பு. பதில் பேசாமல் இருந்த இடத்தில் இருந்து விறு விறுவென கிளம்பிய புஸ்ஸி ஆனந்த்.
தஞ்சையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனட்ந்திடம் விஜய் ரசிகை கேட்ட கேள்வியால் சலசலப்பு. பதில் பேசாமல் இருந்த இடத்தில் இருந்து விறு விறுவென கிளம்பிய புஸ்ஸி ஆனந்த்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இதனையொட்டி, விஜய் சார்பில் இம்மாநாட்டிற்கு அவரது ரசிகர்களையும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் குடும்பத்துடன் நேரில் அழைக்க முடியாத நிலையில், அவர் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஒவ்வொரு மாவட்டமாக நேரில் அனுப்பி அழைப்பு விடுக்க சொல்லியிருக்கிறார் விஜய்.
இதனைத் தொடர்ந்து இன்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை புஸ்ஸி ஆனந்த் சந்தித்தார். அந்த வகையில் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் கும்பகோணம் பெரியநாயகி விலாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களிடையே பேசிய புஸ்ஸீ ஆனந்த், ”எங்கள் தலைவனை எப்போது நேரில் பார்க்கிறோமோ, அப்போது தான் உண்மையான நாளாகவும், சந்தோஷமான நாளாகவும், மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கும். அந்த நாள் அக்டோபர் 27ம் தேதி அன்று தான். கட்சியின் மாநாடு நடக்கும் நாளே எங்களுக்கு தீபாவளி. மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் உரிய பாதுகாப்புடன் வரவேண்டும்.”
“உரிய சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மகளிரை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் பாதுகாப்பாக அவர்களை வீட்டில் விட வேண்டும். எப்போதும் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எனவே எங்களுக்கு 2026ல் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்” என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
அவர் பேசி முடித்தவுடன் முன்புறம் இருந்த பாலக்கரையை சேர்ந்த புஷ்பா என்ற பெண் எழுந்து, ஆனந்த்திடம், ”எனது சகோதரர் தங்கதுரை, விஜய் ரசிகராகவும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் ஆரம்ப காலம் முதல் இருக்கிறார். மன்றமே எங்கள் இடத்தில் தான் செயல்படுகிறது. ஆனால் எனது சகோதரருக்கு உரிய முக்கியத்துவம் தராமல் இன்று மேடையில் ஒரு ஓரத்தில் அமர வைத்துள்ளனர் என தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.
அப்போது மன்ற நிர்வாகிகள் பலர் அவர் பேசுவதை நிறுத்தவும், தடுக்கவும் முயற்சித்தனர். இதனால் அப்செட் ஆன ஆனந்த், கூட்டத்தை விட்டு விறு விறுவென எதுவும் கூறாமல் வெளியேறினார்.
What's Your Reaction?