ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் தீவிபத்து.. விஜய் உத்தரவின்பேரில் ஓடிச்சென்று உதவிய த.வெ.க நிர்வாகிகள்..

Apr 14, 2024 - 16:59
ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் தீவிபத்து.. விஜய் உத்தரவின்பேரில் ஓடிச்சென்று உதவிய த.வெ.க நிர்வாகிகள்..

பெருங்குடி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

இந்த விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அக்கட்சித் தலைமைக்கு தகவல் அளித்தனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்ட விஜயகுமார் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டிற்கு தேவையான மின்விசிறி, அரிசி, பாய் உள்ளிட்ட பொருட்களை அக்கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேலும் உதவிகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow