மோகன் ஜி மன்னிப்புக் கேட்கவேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாகப் பதிவிட்டதற்காக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பதிவிட்ட சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 

Sep 30, 2024 - 19:12
மோகன் ஜி மன்னிப்புக் கேட்கவேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
mohan ji

சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் மோகன் ஜி. இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார். இவரது படங்களை ஒட்டி இவர் தெரிவிக்கும் கருத்துகளே பல வேளைகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில் இவர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து ஒன்றை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து பெரும் பிரனையை எதிர்கொண்டுள்ளார். 

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயனடுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வை உண்டாக்கியது. அந்தப் பரபரப்பான நேரத்தில் திருப்பதி லட்டு கலப்படத்தைப் போலவே பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

ஆதாரமற்ற வகையில் அவதூறு பரப்பியதற்காக மோகன் ஜி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ‘ஆதாரமின்றி எந்தக் கருத்தையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது. ஒரு கருத்தைச் சொல்லும் முன் அது சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். எந்த வலைதளத்தில் இக்கருத்தினை தெருவித்தீர்களோ அந்த வலைதளத்தில் அக்கருத்துக்காக மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow