ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் : முக்கிய அறிவிப்புகள் ஓப்புதல் அளிக்க வாய்ப்பு ?
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20-ம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான அறிக்கை அளிக்க ககன்தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழு நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அறிக்கை அளித்து இருந்தது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
What's Your Reaction?

