”இதுனால தான் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகுறாங்க..” பட்டென பேசிய விஜயபிரபாகரன்
தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்கு தேவையான நல்லதை செய்யாததால் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றனர் என நடிகர் விஜயின் அரசியல் வரவை மறைமுகமாக மேற்கோள் காட்டி மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்கு தேவையான நல்லதை செய்யாததால் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றனர் என நடிகர் விஜயின் அரசியல் வரவை மறைமுகமாக மேற்கோள் காட்டி மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில், தேமுதிகவின் 20ம் ஆண்டு துவக்க விழாவையும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், ”கேப்டன் விஜயகாந்த் எப்போதும் தனக்கு பொறுப்புகள் வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்தால் போதும் என கூறுவார். தற்போது நாங்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்கு தேவையான நல்லதை செய்யவில்லை, அதனால் தான் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றன” என நடிகர் விஜயின் அரசியல் வரவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.
தொடர்ந்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி குறித்து பேசிய அவர், ”குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இருசக்கர வாகனத்திலும், பிற வாகனங்களிலும் சென்றால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் அதே அரசு, பார்முலா ரேஸ் எனும் பந்தயத்தின் மூலமாக மக்கள் பணத்தில் 500 கோடி ரூபாய் வரை வீணாக்கி அவசியமில்லாத கார் பந்தயத்தை நடத்தியது” என கடுமையாக சாடினார் விஜயபிரபாகரன்
What's Your Reaction?