’ச்ச.. அந்த மனசு தான்..’ 100 செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கு பாலா செய்த உதவி...

KPY பாலா 100 செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கு இயரிங் மெஷின் வழங்கி உதவியுள்ளார்

’ச்ச.. அந்த மனசு தான்..’ 100 செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கு பாலா செய்த உதவி...

KPY பாலா 100 செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கு இயரிங் மெஷின் வழங்கி உதவியுள்ளார்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் KPY பாலா.  தற்போது, சின்னத்திரையில், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார்.

சமூக சேவையில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர், மாணவர்களின் கல்வி மற்றும் மக்களின் மருத்துவம் தொடர்பான பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக, மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்சும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோவையும் வழங்கினார். சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தான் சேமித்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை ஆயிரம் ஆயிரமாக பிரித்து, நேரடியாக சென்று வழங்கினார். பாலாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மக்களிடம் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது.

பிறருக்கு உணவளிப்பது, மருத்துவ வசதி இல்லாத கிராம மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கிக்கொடுத்தது, வெள்ளத்தின் போது நிதியுதவி அளித்தது என சமூக அக்கறையோட செயல்படும் கே.பி.ஒய் பாலாவை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தங்குவதற்கு வீடில்லாமல்  வறுமையில் தவித்து வந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த பாலா பீஸ் கட்டமுடியாமல் தவித்த மாணவியை சந்தித்து அவரது கல்விக்கான பணத்தை அவர்களிடம் கொடுத்து சமீபத்தில் உதவியிருந்தார்.

அந்த பணத்தை பெற்ற அந்த மாணவியும் அவரது தாயாரும் கண்ணீர் சிந்தும் காட்சிகளளை நாம் அனைவரும் பார்த்தோம். இந்நிலையில் தற்போது, KPY பாலா 100 செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கு இயரிங் மெஷின் வழங்கி உதவியுள்ளார். இவரின் இந்த செயல் அனைவரையும் கலங்கவைத்திருக்குறது. பாலாவின் இச்செயலுக்காக நெட்டிசன்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow