சச்சினின் சாதனையை மிஞ்சிய விராட் கோலி 

சர்வதேச கிரிகெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கோலி. குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை விட குறைவான இன்னிங்சிலேயே 27 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். 

Sep 30, 2024 - 18:14
சச்சினின் சாதனையை மிஞ்சிய விராட் கோலி 
virat kohli

இந்தியாவுக்கு வங்கதேசத்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி 47 ரன்களுக்கு அவுட் ஆகி அரை சதம் எடுக்கும் வாய்ப்பை மூன்று ரன்களில் தவற விட்டார். அப்படியிருந்தும் அவர் ஒரு சாதனையை இன்று நிகழ்த்தியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று படைத்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவர் 623 இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தற்போது விராட் கோலி அந்த இலக்கை 594 இன்னிங்ஸ்களிலேயே கடந்திருக்கிறார். இதன் மூலம் சச்சினின் சாதனையை விராட் கோலி மிஞ்சியிருக்கிறார்.

இதன்மூலம் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது. சர்வதேச அளவில் இதற்கு முன்னதாக இலங்கை வீரர் குமார் சங்கக்கார 666 இன்னிங்ஸ்களில் 28,016 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்ஸ்களில் 27,483 ரன்கள் குவித்திருந்தார்.

அத்தோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகிய வீரர்களைத் தொடர்ந்து 9,000 ரன்களைக் கடந்த விராட் என்கிற மற்றொரு சாதனையையும் விராட் கோலி இன்று படைத்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow