ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆர்த்தி பதில்

நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் முழுவதும் எங்கள் குடும்பத்தின் நலனில் உள்ளது.

Sep 30, 2024 - 18:56
ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆர்த்தி பதில்
ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆர்த்தி பதில்

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஆர்த்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார்.இதுகுறித்து ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு அவரது மனைவி ஆர்த்தி மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது எனவும், இதனால் நானும் எனது மகன்களும் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து பிரச்னை தமிழ் திரையுலகில் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு நடிகை குஷ்பு உள்ளிட்டோர் ஜெயம் ரவியை மறைமுகமாக சாடினர். இந்நிலையில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, ஆர்த்தியிடம் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து குறித்து பேசி நோட்டீஸ் அனுப்பிவிட்டேன், இதுபற்றிய உண்மைகள் எல்லாம் நீதிமன்றத்தில் தெரியவரும் தெரிவித்தார்.

அதுமட்டும் இல்லாமல் எனது முடிவுக்கு பாடகி கெனிஷா காரணம் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்திய ஜெயம் ரவி, அவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் கூறியிருந்தார். விவாகரத்தில் விஷயத்தில் கெனிஷாவின் தலையீடு இல்லை. எனவே அவரை இதில் தொடர்புப்படுத்த வேண்டாம் என்றார். 

மேலும், கடந்த 13 ஆண்டுகளாக எனக்கென தனியாக பேங்க் அக்கவுண்ட் கிடையாது எனவும், மனைவியுடன் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் உள்ளதாகவும் ஜெயம் ரவி ஆர்.ஜே ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜெயம் ரவியின் மாமியாரும் தொடர்ந்து படங்கள் தயாரித்து, அதில் நஷ்ட கணக்கு காட்டியுள்ளாராம். ஆனால் வெளியில் விசாரித்ததில் படங்களின் மூலம் லாபம் கிடைத்துள்ளதாகவும், திருமண வாழ்வில் முதல் 10 ஆண்டுகள் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம், அதன் பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை எனவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். 

அதேபோல், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் என்னை அவமரியாதையாக நடத்தினர். முக்கியமாக ஆர்த்தியின் வீட்டில் உள்ள வேலையாட்களுக்குக் கூட மரியாதை கிடைக்கும், ஆனால் எனக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள். இதனால் தான் விவகாரத்து முடிவை எடுத்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இசிஆரில் ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டு தரக்கோரி ஜெயம் ரவி சமீபத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.இதனால் ஆர்த்தியை நெட்டிசன்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ஆர்த்தி தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். புதிய அறிக்கையில்,  “எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள பொதுக் கருத்துகளின் வெளிச்சத்தில், எனது மௌனம் பலவீனம் அல்லது குற்ற உணர்வின் அடையாளம் அல்ல என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளேன். ஆனால், நான் சட்ட அமைப்பை நம்புகிறேன்.

பரஸ்பர ஒப்புதலின் படியே அனைத்தும் நடப்பதாக முன்னதாக வெளியான அறிக்கையை பற்றியே நான் முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இன்றுவரை இந்த விஷயத்தை பற்றி பேச தனிபட்ட நேரத்தை நான் கோரிவருகிறேன், ஆனால் அது நிராகரிக்கப்பட்டு வருகிறது. நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் முழுவதும் எங்கள் குடும்பத்தின் நலனில் உள்ளது. மேலும் கடவுளின் கருணை எனக்கு வழிக்காட்டும்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow