விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது- ப.சிதம்பரம் கருத்து
ஜம்மு -காஷ்மீரில் ஆர்டிகல் 370 பிரிவை நீக்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கவில்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்திட ப.சிதம்பரம் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் எம்.பி., இருவரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி விகிதம் 2 கோடி ரூபாய் நகர மன்ற தலைவர் துரைஆனந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் யிடம் அதற்கான காசோலையை ப.சிதம்பரம் வழங்கினார் .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சென்னை மெரினாவில்15 லட்சம் பேர் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர். கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்படவில்லை.ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது தான். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தமிழக அரசு தரும் என நம்புகிறேன் என்றார்.
இஸ்ரேல், ஈரான் போர் நிற்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்து. ஓராண்டு போர் நீடிப்பது நல்லதல்ல, போர் நிறுத்த வேண்டும் என்பதை பிரதமர் பேசியுள்ளார். அதனை காங்கிரஸ் உட்பட எல்லா கட்சியினரும் ஏற்றுக்கொள்கிறோம்
என்றார். மேலும் போர் நடைபெற்று வருவதால் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடுமையான விலை உயர்வு இருக்கும் எனகூற முடியாது. கணிசமாக எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.
நாளை தேர்தல் முடிவு தெரியவரும். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்க்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். கருத்துக்கணிப்புகளும் அரசியல் வல்லுனர்களும் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறுவதை சுட்டி காட்டினார். திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்டுக்கோப்பாக உள்ளது. திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சியில் பங்கு என சிலர் பேசுகின்றனர்.
ஜம்மு -காஷ்மீரில் ஆர்டிகல் 370 பிரிவை நீக்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கவில்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
What's Your Reaction?