ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் முதல்வர் இருப்பார்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
ஆட்சியல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பவர் தமிழக முதல்வர் என அமைச்சர் பேச்சு
ஆட்சியல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பவர் தமிழக முதல்வர் என்று தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தருமபுரி கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துதறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 533 பயனாளிகளுக்கு 2 கோடியே 9 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இறங்கி பணியாற்றி அனைவராலும் பாராட்டபட்ட ஒரே தலைவர் தமிழக முதல்வர் என்றும், நகரபுறத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாமல் கிராமபுறத்திலும் வாழும் மக்களும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் தருமபுரி அடுத்த பாளையம் புதூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் என்ற சீறிய திட்டத்தை துவக்கி வைத்ததோடு, மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை தருமபுரி அடுத்த தொப்பூர் கிராமத்தில் நேரடியாக வந்து தொடங்கி வைத்தார். அதனால் தான் அவர் மக்களின் முதல்வர் என்று போற்றப்படுகிறார் என்ரு பெருமிதம் தெரிவித்தார்.
What's Your Reaction?