அதிகாலயில் கொட்டித் தீர்த்த கனமழை...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

Oct 18, 2024 - 06:51
அதிகாலயில் கொட்டித் தீர்த்த கனமழை...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

வடகிழக்குப் பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு முதல் சென்னையில் கனமழை பெய்தது. இதனால், நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். தொடர்ந்து கடந்த 16-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மழை பெய்யாததால் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் மீண்டும் கனமழை பெய்தது. நேற்று முழுவதும் வெயில் அடித்த நிலையில், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்தது. 

இதனிடையே 15 ஆம் தேதி முதல் நேற்று இரவு 7 மணி வரை அரசு சார்பில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 535 பேருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், அம்மா உணவகங்களில் இரண்டு நாட்களில் 2 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மழை நீர் தேங்கிய 542 இடங்களில் 539 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது எனவும் மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், சென்னையில் 210 இடங்களில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 13 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow