காங்கிரஸ் கனவை தகர்க்கும் பாஜக.. ஹரியானாவில் மாறும் நிலை..!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக நிலவரம் மாறியுள்ளது.

Oct 8, 2024 - 11:42
காங்கிரஸ் கனவை தகர்க்கும் பாஜக.. ஹரியானாவில் மாறும் நிலை..!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக நிலவரம் மாறியுள்ளது.


90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் கடந்த 5ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதேபோன்று ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னான முதல் தேர்தல் என்பதால் பரபரப்பு நீடித்து வருகிறது.

ஜம்முகாஷ்மீரில் 46 தொகுதிகளில் வென்றால் ஆட்சி என்ற நிலையில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக்கட்சி கூட்டணி 47 தொகுதிகளிலும் பாஜக 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். pdp கட்சித்தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்லிதாக கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். தொடர்ந்து டெல்லியில் ஜம்முகாஷ்மீர் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

ஹரியானாவை பொறுத்தவரை 47 தொகுதிகளில் பாஜக - 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.  பாஜக முதலைமைச்சர் முகமான நயாப் சிங் சைனியும் கார்ஹி - சாம்ப்லா தொகுதியில் காங்கிரஸ் முதலமைச்சர் முகமான பூபேந்தர் சிங் ஹூடா முன்னிலை வகிக்கின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow