கட்சித் தாவல் தடை சட்டத்தால் பறிபோன விஜயதரணியின் பதவி!! சட்டம் கூறுவது என்ன?

Feb 24, 2024 - 17:23
Feb 24, 2024 - 21:45
கட்சித் தாவல் தடை சட்டத்தால் பறிபோன  விஜயதரணியின் பதவி!! சட்டம் கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். 
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன? 

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட எம்.பி.க்கள் அல்லது எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் அவா் தனது பதவியை இழப்பாா் என்று கட்சித் தாவல் தடைச் சட்டம் கூறுகிறது. அதேசமயம் ஒரு கட்சியைச் சோ்ந்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் மொத்தமாக கட்சி மாறினாலோ அல்லது புதிய கட்சியைத் தொடங்கினாலோ அவா்களின் பதவி பறிபோகாது என்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கட்சித் தாவல் தடை சட்டம் 1985-ல் ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால் உறுப்பினர் பதவியை இழப்பார்.மேலும் வாக்கெடுப்பின் போது கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக செயல்பட்டால் பதவி பறிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது என்று கட்சித் தாவல் தடை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த விஜயதரணி இன்று (பிப்.24) டெல்லியில் பாஜகவில் இணைந்தால்  அக்கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். இதனால் விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். 

மேலும் படிக்க :

https://kumudam.com/This-is-why-I-joined-the-BJP-Explanation-by-Vijayatharani

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow