யாருக்கு அரியணை? அரியானா, ஜம்மு காஷ்மிர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அரியானாவில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த காங்கிரஸ் காலை 11 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக முன்னிலையில் உள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் தவிர, இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் இறங்கின. ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது.
மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதேப்போல் 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிகையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதில், ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் முன்னிலையில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அரியானாவில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த காங்கிரஸ் காலை 11 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக முன்னிலையில் உள்ளது.
இரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?