ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு? ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’-இல் வெல்லப்போவது யார்?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - சீசன் 10 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கியது.

Dec 3, 2024 - 15:00
Dec 3, 2024 - 15:06
ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு? ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’-இல் வெல்லப்போவது யார்?
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் 10 நிகழ்ச்சியில் வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்

இதில் 6 முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் கௌரவமிக்க நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D.இமான் ஆகியோர் உள்ளனர்.

இந்த சீசனில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பல நெகிழ்வான கதைகள் உள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு இந்த நிகழ்ச்சி சார்ந்த ப்ரோமோ வெளிவந்தது. அதில் ராணிப்பேட்டையில் இருந்து நஸிரீன், சேலத்தில் இருந்து ரேணுகா, கோவையில் இருந்து ப்ரனேஷ் மற்றும் சென்னையில் இருந்து சாரா ஸ்ருதி ஆகியோர்கள் இந்த ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டனர்..

இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பித்து சில வாரங்களே ஆன நிலையில், வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ரவுண்டு இந்த மேடையில் அரங்கேற உள்ளது.


வரும் டிசம்பர் 7, 8, 2024 தேதிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’ ரௌண்டில் குழந்தைகள் சூப்பர் ஸ்டாரின் ‘ஹிட்’ பாடல்களை தேர்வு செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி போட்டியை சந்திக்க உள்ளனர்.


இதில் சிறப்பாக பாடும் ஒரு குழந்தையை தேர்வுசெய்து அவருக்கு ஒரு பரிசு அளிக்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், தானே கையெழுத்திட்ட ஒரு கிட்டார் பரிசாக காத்திருக்கிறது. அதை வெல்லப்போவது யார் என்பதை வரும் டிசம்பர் 7, 8, சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30  மணிக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10ல் கண்டு ரசிக்கலாம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow