காதலியை பார்க்கச் சென்ற வாலிபர் வெட்டிக் கொலை.. பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்

காதலியை பார்ப்பதற்கு வரச்சொல்லி, வாலிபரை கொலை செய்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Dec 2, 2024 - 15:34
Dec 2, 2024 - 15:38
காதலியை பார்க்கச் சென்ற வாலிபர் வெட்டிக் கொலை.. பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்
வாலிபரை கொலை செய்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 2 பேர் கைது

பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவில் அண்ணா நகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து, வீட்டின் மாடியில் சென்று பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட வாலிபரை அந்த வீட்டுக்கு அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் அந்த வாலிபரை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (24) என்பதும், காதல் விவகாரத்தில் அவரை நெல்லைக்கு வரவழைத்து, கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு வரவழைத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow