அரசு திட்டங்களை‌ கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்.. தமிழக அரசு எடுத்த முன்னெடுப்பு

அரசு அறிவிக்கும் திட்டங்களை‌ கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

Sep 24, 2024 - 11:15

இது தொடர்பாக வெளியான அரசாணையில் “சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு  அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.

 மாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும் மற்றும் மாவட்டங்களில்  ஆய்வு செய்வதை  உறுதி செய்ய வேண்டும்

கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்” என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்:  

*அரியலூர் - விஜயலட்சுமி

*செங்கல்பட்டு - ராகுல்நாத்

*கோவை - ஆனந்த்

*கடலூர் - டி.மோகன்

*சென்னை - பி.என்.ஸ்ரீதர்

*தர்மபுரி - திவ்யதர்ஷினி

*திண்டுக்கல் -அனீஷ் சேகர்

*ஈரோடு-வெங்கடேஷ்

*கள்ளக்குறிச்சி - மதுசூதன் ரெட்டி

*காஞ்சிபுரம் - கந்தசாமி

*கன்னியாகுமரி - ஹனிஷ் ஷாப்ரா

*கரூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

*கிருஷ்ணகிரி - ஷில்பா பிரபாகர் சதீஷ்

*மதுரை - அருண் தம்புராஜ்

*மயிலாடுதுறை - கவிதா ராமு

*நாகை - அண்ணாதுரை

*நாமக்கல் - ஆசியா மரியம்

*பெரம்பலூர் - லட்சுமி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow