ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி மாற்றம் - தலைமைச் செயலகம் அறிவிப்பு

IAS-Officials- transfer-and-posting-are-notified

Feb 12, 2024 - 22:11
Feb 13, 2024 - 02:42
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி மாற்றம் - தலைமைச் செயலகம் அறிவிப்பு

மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் திருச்சி ஆணையர் ஆகியோரை பணி மாற்றம் செய்து தலைமைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மோகன் ‘முதல்வரின் முகவரி’ துறைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாகவும், அதேபோல திருச்சி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த வைத்திநாதன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு “முதல்வரின் முகவரி” என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow