சிறுமயிடம் பாலியல் பலாத்காரம்-இளைஞர் போக்சோவில் கைது 

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Jan 3, 2024 - 13:55
Jan 3, 2024 - 20:46
சிறுமயிடம் பாலியல் பலாத்காரம்-இளைஞர் போக்சோவில் கைது 

ஸ்ரீபெரும்புதூர் அருகே 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதற்காக கடந்த 25ஆம் தேதி தனது பெற்றோர்களுடன் வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி திடீரென சிறுமி காணாமல் போய் உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பதறிப்போன பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் போலீசார் சிறுமி குறித்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் உறவினரான பிச்சிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்துரு (23) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் சுங்குவார்சத்திரம் அருகே இருந்த சிறுமியையும், சந்துருவையும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்டனர். 

பின்னர் சந்துருவை கைது செய்து மகளிர் போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சந்துரு மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் சந்துருவை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow