கத்தியாக மாறிய பீர் பாட்டில்... வியாசர்பாடியில் கொலை குற்றவாளி கொலை... மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
சென்னை வியாசர்பாடியில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி குட்ஷெட் ரோடு அருகே தலையில் பலத்த காயத்துடன் இளைஞர் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை சோதித்த போது, தலையில் பலத்த காயத்துடனும், கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த நவீன் குமார் என்கின்ற வாழைப்பழ அப்பு என்பது தெரிய வந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட நவீன் குமார் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இக்கொலை பழிக்குப்பலி வாங்கப்பட்தா அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர்கள் வைத்து தடயங்களை சேகரித்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






