ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த காவலர்...Dating App மூலம் வந்த ஆப்பு...உயிர்பிழைத்து வந்த இளைஞர்
3 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அடித்து விரட்டியது அம்பலம்.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் இளைஞரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, அவரை தாக்கி காவலர் ஒருவர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பரபரப்பான உலகில், ஆன்லைன் மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் காவலரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருகிறார். திருமுல்லைவாயல் 5-வது பட்டாலியன் காவல்படையில் பணிபுரிந்து வரும் அப்துல் ரஹ்மான், Dating App மூலம் இளைஞர் ஒருவரிடம் பழகி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்திருக்கிறார். இந்த நிலையில், தாம் கூறும் இடத்திற்கு வா, உல்லாசமாக இருக்கலாம் என காவலர் அப்துல் ரஹ்மான் அந்த இளைஞரிடம் கூறியிருக்கிறார்.
அதன்படி, திருமுல்லைவாயலில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வந்த அந்த இளைஞருடன் அப்துல் ரஹ்மான், அவரது தம்பி மற்றும் மூன்று நண்பர்கள் சேர்ந்து உல்லாசமாக இருந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள், அந்த சித்திரவதை செய்ததோடு, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த இளைஞரை மிரட்டி Phone Pay மூலம் 25 ஆயிரம் ரூபாய் பரிமாற்றம் செய்து கொண்டு அடித்து விரட்டியிருக்கின்றனர்.
உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பித்த அந்த இளைஞர், உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதையடுத்து, காவலர் அப்துல் ரஹ்மான், அவரது நண்பரை பிடித்து விசாரித்து வரும் நிலையில், காவலரின் தம்பி உள்பட 3 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
வேலியே பயிரை மேய்ந்தார் போல இளைஞருடன் காவலரே உல்லாசம் அனுபவித்து விட்டு அவரை தாக்கி பணம் நகை பறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?