மதுரை சித்திரை திருவிழாவில் அரங்கேறிய வன்முறை - 69 பேர் மீது வழக்குப்பதிவு, 26 பட்டாகத்திகள் பறிமுதல்..!
CCTV கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்
மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாகத்தியுடன் இளைஞர்கள் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து 26 பட்டாகத்திகளை பறிமுதல் செய்த போலீசார் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் 11ஆம் தேதி துவங்கிய சித்திரைத்திருவிழா கொடியேற்றத்ததுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க தனி அறையும் அமைக்கப்பட்டிருந்தது.
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் சில இளைஞர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து பட்டாக்கத்திகளுடன் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 82 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் 26 பட்டாக்கத்திகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், 69 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் வந்த செய்தி தொடர்பாகவும், CCTV கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாக்கத்தி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வானது எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?