ரேஷன் கடையை சூறையாடிய யானைகள்
வால்பாறை அடுத்த முடிஸ் பகுதியில் உள்ள நியாய விலை கடையை சூறையாடிய காட்டு யானை கூட்டம்.
வால்பாறை அடுத்த முடிஸ் பகுதியில் உள்ள நியாய விலை கடையை சூறையாடிய காட்டு யானை கூட்டம்.
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் டவுன் பகுதியில் இயங்கி வரும் ரெட் ரோஸ் நியாயவிலைக்
கடையை அதிகாலை 4 மணி அளவில் சூறையாடிய காட்டு யானை கூட்டமானது அங்குள்ள பொதுமக்கள்
விநியோகத்திற்கு வைக்கப்பட்டு இருந்த 75 கிலோ சர்க்கரை 30 லிட்டர் பாமாயில் அரிசி உள்ளிட்ட
பொருட்களை சுறையாடி உள்ளது.
அப்பகுதியில் குடியிருப்புகள் இல்லாத காரணத்தினால் கடை உடைக்கும் சத்தம் கேட்காத நிலையில் காலையில்
அங்கு வந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கடை உரிமையாளர் சென்று பார்த்தபோது கடையை சூறையாடி உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அளிக்கக்கூடிய விநியோகப் பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. உடனடியாக வனத்துறைக்கு
தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து இருப்பதால்
இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
மேலும் தாங்கள் பகுதிக்கு வரும் யானை கூட்டங்களை தகவல் தெரிவிக்கவும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுற்றி தெரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நியாய விலை கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?